வெள்ளி, 2 ஜூலை, 2010

ஜாக்சனைப் பாதித்த 'விடிலிகோ' சரும நோய் மகனுக்கும் வந்தது!

லண்டன்: பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் மற்றும் முகத்தின் நிறத்தை கோரமாக்கிய விடிலிகோ என்ற சரும நோய் தற்போது ஜாக்சனின் மகன் பிரின்ஸ் மைக்கேல்-1க்கும் வந்துள்ளது.

மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருந்தபோது முகம் மற்றும் உடலின் நிறம் திடீரென மாறத் தொடங்கியது. அலங்கோலமாக மாறியதால் அவரது முகமும், உடலும் நலிவடைந்து போனது.

உடலின் கருமை நிறத்தை மறைக்க ஜாக்சன் செய்த ப்ளீச்சிங்கால்தான் இப்படி ஆனதாக அப்போது கூறினார்கள். ஆனால் உண்மையில் அவருக்கு வந்த விடிலிகோ என்ற சரும நோய்தான் இந்த அலங்கோலத்திற்குக் காரணம்.

ஜாக்சன் இதைக் கூறியபோது யாரும் நம்பவில்லை. இந்த நிலையில் தற்போது ஜாக்சனின் 13 வயது மகன் பிரின்ஸ் மைக்கேலுக்கும் இந்த சரும நோய் வந்துள்ளதால் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

சமீபத்தில் ஹவாய்க்கு தனது தங்கை பாரிஸ், தம்பி பிரின்ஸ் மைக்கேல்-2 ஆகியோருடன் சென்றிருந்தான் பிரின்ஸ். அப்போது அவனது அக்குள் பகுதியில் வெள்ளைத் திட்டுக்கள் இருப்பதைப் பார்த்தனர் குடும்பத்தினர்.

முதலில் இது சூரிய ஒளியால் ஏற்பட்ட திட்டுக்களாக இருக்கும் என சந்தேகித்தனர். ஆனால் மருத்துவ சோதனையில்தான் இது விடிலிகோ எனத் தெரிய வந்தது.

விடிலிகோ என்பது மரபு ரீதியாக வரும் நோயாகும். இது வந்தால் தோலின் நிறம் மொத்தமாக மாறிப் போய் விடும். உடலின் பொலிவே போய் விடும்.

தற்போது பிரின்ஸுக்கு இந்தப் பிரச்சினை வந்துள்ளதால் அவனது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

அதேசமயம், இப்போதாவது பிரின்ஸ்தான், மைக்கேல் ஜாக்சனின் வாரிசு என்பதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக