திங்கள், 26 ஜூலை, 2010

எஸ்.எஸ்.சந்திரன் மீது அவதூறு வழக்கு



ஆண்டிப்பட்டி தாலுக்காவில் உள்ள கடமலைக் குண்டுவில் அதிமுக சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
 
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், வளர்மதி, அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், நடிகர் ராமராஜன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.
வளர்மதி அவதூறாக பேசுவதாக கூறி போலீசார் மேடைக்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது.
 
கூட்டம் முடிந்ததும்  வளர்மதியையும், எஸ்.எஸ்.சந்திரனையும், ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
முதலமைச்சர் கருணாநிதி,  மத்திய மந்திரி முக.அழகிரி ஆகியோரை இந்த கூட்டத்தில்  அவதூறாக பேசியதாக கடமலைக்குண்டு போலீசார் எஸ்.எஸ்.சந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக