இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை மீண்டும் அதே அபாயத்திற்குள் தள்ளுவது நியாயமில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கில்லாட் தெரிவித்துள்ளார்.
அகதிகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காமல் எதிர்ப்புத் தெரிவித்து சுலோகங்களைத் தூக்குவது ஏற்புடையதல்ல. இது எதிர்க்கட்சிகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே தவிர உண்மையான கரிசனைக்கானது இல்லை. எவ்வாறாயினும் பசுபிக்கொள்கை அடிப் படையில் அகதிகள் தொடர்பான தீர்வினை முன்வைக்க விரும்புகின்றோம்.
இதற்கிடையில் பசுபிக் கொள்கை அடிப்படையில் அவுஸ்திரேலியாவுக்குள் வரும் அகதிப் படகுகள் மீண்டும் திருப்பியனுப்பப்படுமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் வழங்கிய அவர், பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை மீண்டும் அதே அபாயத்திற்குள் தள்ளுவது நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அபாயகரமான முறையில் அவுஸ்திரேலியா வருகின்றவர்கள் தொடர்பில் கரிசனை காட்ட முனைவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக