யாழ் குடாநாட்டின் முக்ய பொறுப்புக்களில் பெண்கள் உள்ளது மிகவும் வரவேற்கப்படும் முன்னேற்றமாகும். பாரம்பரிய ஆணாதிக்க சமுகத்தில் இருந்து பெண்கள் இந்நிலையை அடைந்தது இருப்பது தெற்கு ஆசியாவிற்கே ஒரு முன்மாதிரியாகும்
.
அவர்களில் சிலரது விபரங்கள் வருமாறு;
இன்று வியாழக்கிழமை திருமதி இமெல்டா சுகுமார ்யாழ் அரசு அதிபராக பதை ஏற்கிறார்.
யாழ். மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம்,
யாழ்ப்பாண பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம்,
யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா,
உடுவில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளா தேவி சதீஷன்,
சங்கானை பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு,
யாழ். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பசுபதிராஜா பவானி,
யாழ்ப்பாண கல்விப் பணிப்பாளர் திருமதி.கே.வேதநாயகம்,
யாழ்.பிராந்திய மாகாண ஆணையாளர் திருமதி எஸ். சிவலிங்கம்,
யாழ்.பிராந்திய உதவிப் பதிவாளர் திருமதி மகாராணி இராஜரத்தினம்,
புவிச்சரிதவியல் சுரங்கப் பணிகள் அகழ்வு பணிப்பாளர் எந்திரி கே.யோககௌரி,
வலிகாமம் தெற்கு பிரதேச சபை செயலாளர் சுலோசனா முருகேசன்,
யாழ்ப்பாணம் சித்த மருத்துவத்துறை தலைவர் திருமதி சிவஞானமணி பஞ்சராசா,
யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத் தலைவர் செல்வி சிவமதி சிவச்சந்திரன்,
யாழ்.பல்கலைக்கழக நூலகர் செல்வி சிறி அருளானந்தம்
என பெரும்பாலான சிவில் நிர்வாகசேவை பகுதிகளுக்கு பெண்களே நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக