வெள்ளி, 30 ஜூலை, 2010

இவர் மாணவிகளைப் பற்றித் தன் நண்பர்களிடம் கதைத்திருப்பது ஒலிப்பதிவாகி

என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் அம்மணி?
(ஜீவிதன்)
மாணிக்கவூர் பகுதியில் அரிச்சந்திரன் காத்த இடத்தில் உள்ள கலவன் பாடசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு உடனடியாகவே விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக அறிகிறோம். தற்போது அந்த மாகாணத்திற்குப் பொறுப்பாக உள்ள கல்வி அதிகாரி அம்மணிக்குப் பாராட்டுகள்.
ஆனால், விசாரணை நியாயமாக நடத்தப்பட்டதா என்பது பற்றி இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை. ஆற அமரவில் தகவல் அம்பலமானதும் ஒருசமாளி பிகிகேஷனு’க்காக விசாரணை நடத்தப்பட்டிருப்பாக சிலர் உணர்கிறார்கள். அது ஏனென்ற தெளிவு விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
குறித்த இந்த சூரிய ஆசிரியர் உயர் வகுப்பு மாணவிகளைப் பற்றி சக ஆசிரியர்களிடம் எவ்வாறு கதைக்கிறார் என்பதைக் கேட்டால், இவரெல்லாம் இந்தப் புனிதப் பணிக்குப் பொருத்தமே இல்லாதவர் என்பது புரியும்.
தாம் கற்பிக்கும் மாணவர்களைத் தமது பிள்ளைகளாக எண்ணி அவர்களுக்குக் கல்வியை மாத்திரமன்றி நல்லொழுக்கத்தையும் சொல்லித்தர வேண்டியவர்கள் இவ்வாறு கீழ்த்தரமான சிந்தனைகளுடன் பாடசாலைக்குச் சென்று எவ்வாறு கற்பிப்பார்கள்? அரிச்சந்திரன் காத்த இடத்துப் பாடசாலையில் மட்டும் இல்லை. பொதுவாக இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் நிலைமை இதுவாக உள்ளதுதான் வேதனைக்குரிய விடயம்.
மஞ்சள் வளரும் நகருக்குச் செல்லும் வழியில் உள்ளஇறுக்கமானதன்னை’யில் அமைந்துள்ள ஒரு பாடசாலையின் அதிபரை சிங்களத்தில்முதலாளி எங்கேஎன்பார்கள். இன்னும் விளக்கம் வேண்டுமென்றால் ஹட்டன் பாடசாலை ஒன்றை நினைத்துப் பாருங்கள். இப்போது புரிந்திருக்கும் இல்லையா? இவர் மாணவிகளைப் பற்றித் தன் நண்பர்களிடம் கதைத்திருப்பது ஒலிப்பதிவாகி இருக்கிறது. இவர் போதையில் (மது அல்ல) உளறுவதைப் பதிவு செய்வது இவருக்கெங்கே புரியப் போகிறது.
மலையகத்தில் கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரை இரத்தின கல் மாவட்டம் படு பாதாளத்தில் இருக்கிறது என்பதை பணிப்பாளர் அம்மணி நன்கு அறிவார். பாடசாலைக் கல்வி சீரழிவதற்குப் பொதுவாக அதிபர், ஆசிரியர்களின் மெத்தனப் போக்கும், சிந்தனைக் குறைபாடும், பொறுப்பற்ற தன்மையும் முக்கிய காரணிகளாக உள்ளன.
ஆகவே, அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்டு கல்வித் துறை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதால்தான் இங்கு சில விடயங்களை மட்டும் குறிப்பிடுகிறோம். எவரையும் தனிப்பட்ட ரீதியில் புண்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. அதனால்தான் பத்திரிகா தர்மம் நின்று விளங்கியும் விளங்காமல் ஆசிரியர்களை மறைமுகமாக இனங்காட்டுகிறோம். சமூகத்தில் நற்பெயரைப் பேணி வருகிறவர்கள், எதிர்பார்க்கிறவர்கள் ஆசிரியர்கள். ஆனால் அவர்கள் சொந்தச் சமூகத்தின் பிள்ளைகள் சீரழிவதற்குக் காரணமாக இருக்கலாமோ?
கரையேறுவது எங்ஙனம் என்ற பாடத்தை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டு ஆசிரியர்கள் மட்டும் இக்கரையில் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கவில்லை. அவர்களின் உபரி வருமானத்திற்காக கல்விச் சமூகத்தைச் சுரண்டக் கூடாது என்பதும் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்பதும்தான் நமது விருப்பம்.
கல்விக்கு உரிய மண்ணில் பிறந்த பணிப்பாளர் அம்மணி அவர்களே, இரத்தினக் கல் மாவட்டத்தின் கல்வியை தூக்கி நிமிர்த்துவதற்கு நீங்கள்தான் இன்னும் பங்களிப்புச் செய்யவேண்டும். உங்கள் மீது அந்த நம்பிக்கையும் மரியாதையும் எமக்கு மட்டுமல்ல முழுக்கல்விச் சமூகத்திடமே உள்ளது. கலவன் பாடசாலை பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்த நீங்கள், ஏன் ஏனைய பாடசாலைகளின் நிலைவரம் பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்று எல்லோரும் கேட்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக