வெள்ளி, 2 ஜூலை, 2010

சிரஞ்சீவ, திருப்பதி கோவிலில்ஊழல், பல ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு

திருப்பதி கோவிலில் பல ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக, பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கிருஷ்ண தேவராயர் வழங்கிய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த விவகாரத்தில் தேவஸ்தான அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருகிறார்கள்.

ஒருவர் நகை மாயமாக வில்லை, உருக்கப்பட்டு விட்டது என்கிறார். இன்னொருவர் பழங்கால நகைகள் நிறைய உள்ளன. அதில் கிருஷ்ணதேவராயர் வழங்கிய நகைகள் எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்.

இதனால் திருப்பதி கோவிலில் பல ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

எனவே திருப்பதி கோவிலில் நகைகள் மாயமானது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும். இதற்காக நான் 9 ந்தேதி திருப்பதி வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மனு கொடுப்பேன்.

நகைகளை திருடி சென்றவர்கள் யார் என்பது பற்றி முறையான விசாரணை நடத்தி உண்மையை கண்டு பிடிக்க வேண்டும். நகைகளை உருக்கியபோது இருந்த நிர்வாக அதிகாரி யார்? அறங்காவலர் குழு தலைவர் யார்? என்பதை கண்டு பிடித்து விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரிய வரும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக