புதன், 14 ஜூலை, 2010

அசினிடம் எங்களை விட்டு போக வேண்டாம் இங்கேயே இருங்கள்

வவுனியாவில் உள்ள ஸ்ரீலயா சேவனா காப்பகத்துக்கு சென்ற அசின் குழந்தைகளுடன் அமர்ந்து பல மணி நேரம் செலவிட்டார். அங்குள்ள இளம் பெண்கள் அசினிடம் எங்களை விட்டு போக வேண்டாம் இங்கேயே இருங்கள் என்று சொல்லி பாசத்தோடு ஒட்டிக் கொண்டனர்.வவுனியாவில் நடைபெறும் கண் சிகிச்சை முகாமுக்கும் சென்றார். டாக்டர்களிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டி இன்னும் கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்தலாமே என்று யோசனை சொன்னார். இந்தியாவில் இருந்து 5 கண் மருத்துவர்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். இப்பகுதி விடுதலைப்புலிகள் வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்ற அசின் பரிசு பொருட்களை வழங்கினார். சில நிமிடங்களிலேயே அசினுடன் குழந்தைகள் நெருக்கமாகி விட்டனர். அவர் அங்கிருந்து புறப்பட்ட போது சில குழந்தைகள் அழுதனர்.  அங்கிருந்து போக விடாமல் தடுத்தனர். தயவு செய்து இன்னும் 5 நிமிடம் இருந்து விட்டு போங்கள் அக்கா என்று கெஞ்சினர்.
ஒரு இளம் பெண் அழுதே விட்டார்.அடுத்த முறை நீங்கள் வரும் போது விஜய்இசூர்யாஇ அஜீத் உள்ளிட்ட எல்லா நடிகர்களையும் அழைத்து வாருங்கள் என்று வேண்டினர். அவர்களிடம் இருந்து கனத்த இதயத்தோடு அசின் விடை பெற்று சென்றார்.
இதற்கிடையில் தடையை மீறி இலங்கை படப்பிடிப்புக்கு சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் தயாராகி வருகிறது.தமிழ் படங்களில் அசினுக்கு தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, July 13,2010 11:44 PM, இலங்கையன் said:
கண் எட்டா தூரத்தில் இருந்து மணிக்கணக்கா மேடையில் கத்துவதை விட பக்கத்தில் போய் 1 நிமிடம் தோளில் கை போட்டு ஆர்தல் சொல்வது எவ்வளவோ மேலானது அப்போ தான் உண்மை நிலைஹளையும் அறிந்து கொள்ளலாம். ( இதெல்லாம் இறக்க மனம் படைதவர்ஹளுக்கு புரியும் பேராசை, பதவி ஆசை படைத்த மனங்களுக்கு எங்கே புரிய போஹுது )
Tuesday, July 13,2010 07:20 PM, Mohan said:
Ethu avura kathi illa
Tuesday, July 13,2010 06:52 PM, விஜயாரசு said:
சூப்பர் அப்பு . ஸ்ரீலங்கா சூட்டிங் போன பிரிச்சனை திசை திருப்ப இப்படி ஒரு செயலா ??????????????????????????????????????????????????????. சூட்டிங் போனது சரி . ஏன் என்றால் வேலை வேற பிரைச்சனை வேற .. அசின் ஒரு நல்ல பொண்ணு .
Tuesday, July 13,2010 06:34 PM, Jayachandran said:
சூட்டிங் ஸ்பாட்ல நடிச்சா போதும்.
Tuesday, July 13,2010 06:12 PM, nalan said:
இதுவன்றோ காயம்யுற்ற எமது மனதிற்கு உண்மையான ஆறுதல். கண்டிப்பாக இவர் தமிழனாக இருக்க முடியாது. இருந்திருந்தால் தமிழ்நாட்டிலயே இருந்து என் உடன் பிறபே, என் ரத்ததின் ரத்தமே என்று கூறியதோடு நிருத்தியிருப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக