வியாழன், 8 ஜூலை, 2010

விமல் வீரவன்ச,சாகும்வரையிலான உண்ணா விரதப்போராட்டமாக

நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக தேசிய சுதந்திர  முன்னணியின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு  வரும்  சத்தியாக்   கிரகப்  போராட்டம்   நேற்று  இரண்டாவது  நாளாகவும்,   தொடர்ந்தும்   இடம்பெற்றது.
ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள விசேட கொட்டகையிலும் வெளியேயும் 30க்கும் மேற்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஜக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ – மூன் நியமித்துள்ள நிபுணர்கள் குழுவினை கலைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று சத்தியாக்கிரகத்தில்   ஈடுபட்டுள்ளவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று   முதல் சாகும்   வரையிலான   உண்ணாவிரதப் போராட்டமாக உருவெடுக்கும் என்று தேசிய சுதந்திர  முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.      இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் சகல மக்களும் கலந்து கொள்ள வேண்டு மென்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக