வெள்ளி, 2 ஜூலை, 2010

மூன்று மாதங்களில் 8502 விபத்து 202 பேர் பலி; 448 பேர் காரியம்



2009 ஆம் ஆண்டில் 33,721 விபத்துகளும் 2008 இல் 30,420 விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. விபத்துகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது ஐ.தே.க. கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில் வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், 2008 ஆம் ஆண்டு 30,420 விபத்துகள் இடம்பெற்றதுடன் அதில் 2157 விபத்துகள் மரணத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்   28,263 விபத்துகள் சாதாரண விபத்துகளாகும்.        2009 ஆம் ஆண்டில் 33,721 விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 2225  மரணம்   சம்பவிக்கக் கூடிய  விபத்துகள்   என்பதுடன்   31,496 சாதாரண விபத்துகளாகும்.
2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை 8502 விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 643 மரணத்தை விளைவிக்கக் கூடிய விபத்துகள் என்பதுடன் 7859 சாதாரண விபத்துகளாகும்.    மிக வேகமாக வாகனத்தை செலுத்தியமையால் 2008 இல் 4272 விபத்துகளும் 2009 இல் 4898 விபத்துகளும் 2010 இல் மூன்று மாதங்களில் 887 விபத்துகளும் இடம்பெற் றுள்ளன.
மது போதையில் 2008 இல் 1522 விபத்துகளும் 2009 இல் 1342 விபத்துகளும் 2010 இல் முதல் மூன்று மாதங்களில் 260 விபத்துகளும் இடம்பெற்றுள்ளன.      மிகவேகமாக வாகனத்தை செலுத்தியமையினால்  2008 இல்  522 பேர் பலியானது டன்    1312 பேர் படுகாயமடைந்துள்ளனர்.    2009  இல் மிகவேகமாக வாகனத்தை    செலுத்தியமையால்   579பேர் பலியானதுடன்   352 பேர் படுகாயமடைந்துள்ளனர்.   மதுபோதையினால் 2008 இல் 153 பேர் பலியானதுடன் 308 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
2009 இல் 112 பேர் பலியானதுடன் 256 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பதுடன் 2010 இல் முதல் மூன்று மாதங்களில் 32 பேர் பலியானதுடன் 96 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாட்டில் இடம்பெறும் விபத்துகளினால் அரசாங்கத்தின் செலவு அதிகரிக்கின்றது.  விபத்துகளை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறி பால டி சில்வா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக