சனி, 3 ஜூலை, 2010

யாழ்ப்பாணத்தில் 75.இலட்சம் ரூபா மோசடி ,புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று பொது மக்களிடமும் அதன் பணியாளர்களிடமும் சுமார் 75.இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்போது அதன் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்.கஸ்தூரியார் வீதியில் மாடிக்கட்டடம் ஒன்றில் இவ்வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிதி நிறுவனம் கடந்த 25.நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டுள்ளதோடு அதன் உரிமையாளரும் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிறுவனத்தில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டவர்களிடம் ஒரு லட்சம், ஐம்பதினாயிரம் என பணம் பெறப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இணைகின்றவர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன.இதன் காரணமாக குறுகிய காலத்தில் 3500.வரையிலான வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டனர். தற்போது இதன் வாடிக்கையாளர்கள் தாங்கள் எமாற்றப்பட்டமை குறித்து பொலஸில் முறையிட்டு வருகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் நிதி நிறுவனங்களின் நிதி மோசடி இது முதற் தடவையல்ல. யாழ் உதயன் பத்திரிகையின் நிறுவனர் சரவணபவனின் நிதி நிறுவனமான சப்ரா பினான்ஸ் லிமிடடில் வைப்பிட்ட பலரும் தங்கள் சேமிப்பை இழந்தனர்.சிலர் தற்கொலைக்கும் முயற்சித்து இருந்தனர்.இன்று சரவணபவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
www.engalthesam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக