செவ்வாய், 27 ஜூலை, 2010

7 ஆயிரத்து 980 முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை விடுவிக்கத் திட்டம்!

புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள 7 ஆயிரத்து 980 முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை விடுவிக்கத் திட்டம்!

 
புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள 7 ஆயிரத்து 980 முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை மிகக் குறுகிய காலப் பகுதியில் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கை புனர்வாழ்வு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள அனைத்து முன்னாள் போராளிகளும் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக வடக்கில் 12 புனர்வாழ்வு நிலையங்களில் தொழில்சார் பயிற்சிகளை பெற்று வந்ததாக புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் பிரிகேடியர் சுதன்ன ரணசிங்க தெரிவித்தார்.

பிரதான சந்தேக நபர்களாகக் கருதப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 1300 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வேறு மத்திய நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக