புதன், 21 ஜூலை, 2010

இலங்கையில்40 ஆயிரம் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை

இலங்கையில்,* இலங்கை சனத்தொகையில் 31 வீதமானோர் 18 வயதிற்குக் குறைந்தவர்களாவர்.
*சுமார் 40 ஆயிரம் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
* கொழும்பு வீதிகளில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் மற்றும் கொழும்பில் கடைகளில் தொழில்புரிவேரின் எண்ணிக்கை 2ஆயிரம் ஆகும்கொழும்பு தவிர ஏனைய பகுதிகளில் இவ்வாறு 2500 சிறுவர்கள் இருக்கிறார்கள்.
* சுமார் 30ஆயிரம் சிறுவர்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் சிறுவர் அமைப்பு நிலையங்களிலும் வாழ்கிறார்கள்.
* யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் சிறுவர்களில் 850 பேர் பெற்றோரை (ஒருவரை அல்லது இருவரை) இழந்தவர்களாவர்.



உலகத்தில்...
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 6 முதல் 11 வயதிற்குட்பட்ட 12 கோடி சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை.

* உலகம் முழுவதும் சுமார் 10 கோடி சிறுவர்கள், சிறுவர் தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
* தெற்காசியாவில் சுமார் 50 இலட்சம் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்இவர்களில் அதிகமானோர் பாலியலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தப்படுகிறார்கள்.
* ஆசிய கண்டத்தில் வருடந்தோறும் 5 இலட்சம் சிறுவர்கள் கடத்தப்பட்டு அடிமைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
* உலகம் முழுவதும் வருடாந்தம் 12 இலட்சம் பெண்களும் சிறுவர்களும் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறார்கள்.
* ஒவ்வொரு 60 செக்கனிலும் 20 இளஞ்சிறுவர்கள் எளிதில் பாதிக்கக்கூடிய நோயினால் மரணமடைகின்றனர்.
*ஆபிரிக்காவில் ஐந்து பெண்களில் ஒருவர் புதிதாகப் பிறக்கும் குழந்தையை இழக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக