செங்கோட்டை அருகே தமிழக எல்லை பகுதியை தாண்டி அச்சன்கோவி்ல் வனப்பகுதியி்ல் கும்பாவுருட்டி அருவிக்கு சுற்றுலா சென்ற தாய், மகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 சுற்றுலா கைடுகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
செங்கோட்டை அருகே தமிழக எல்லை பகுதியை தாண்டி அச்சன்கோவி்ல் வனப்பகுதியி்ல் கும்பாவுருட்டி அருவிக்கு சுற்றுலா சென்ற தாய், மகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், சிலதினங்களுக்கு முன் மீண்டும் தமிழகத்தில் இருந்து கும்பாவூருட்டி அருவிக்கு சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தினருக்கு கேரள வனக்குழுவினரும், காவலர்களும் பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை உளவுப்பிரிவு விசாரிக்க கேரள வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கும்பாவுருட்டி மணலார் சுற்றுலா மைய வனத்துறை கைடுகளான அச்சன்கோவிலை சேர்ந்த மணிகண்டன், அப்துல் ரகுமான், உன்னிகிருஷ்ணன் ஆகியோர் தமிழக பெண்களை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்து வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். நேற்று அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து குளத்துபுழா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை நேற்று மாலை 5 மணிக்கு அச்சன்கோவி்ல் மணலாறு, கும்பாவுருட்டி அருவி பகுதிக்கு குளத்துபுழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ், தலைமையி்ல் போலீசார் அழைத்து சென்று தமிழ் பெண்களை பலத்காரம் செய்த இடங்களை நேரில் காட்டச் செய்தனர். அதன் பின்னர் செங்கோட்டை வழியாக அவர்களை போலீசார் கேரளாவுக்கு அழைத்து சென்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக