புதன், 30 ஜூன், 2010

T.N.A -- E.P.D.P, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்றமை குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்   ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில்  மிகவும் வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு  ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
இருவரும் இன்று நாடாளுமன்றத்தில் நேரடியாகச் சந்தித்துப் பரஸ்பரம் பேசுகின்றார்கள்.    தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைத் தீர்வுக்கான அணுகுமுறை குறித்துத் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு காணுதல்,    தமிழ் மக்களின் அன்றாட அவலங்களுக்கு உடனடித் தீர்வு காணுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஒருமித்துச் செயற்படுதல் ஆகிய இரு பிரதான நோக்கங்களை முன் நிறுத்தி கடந்த 24 ஆம் திகதி மாலை பாரம் பரிய மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாசஸ்தலத்தில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்திருந்தது.
அமைச்சர்   தேவானந்தா தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங் ம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்ம நாபா) அணியின் தலைவர் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி பிரமுகர்களுமான கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.
சிறிகாந்தா, சிறிரெலோ அமைப்பின் தலைவர் உதயன், ஈரோஸ் கட்சியின் செயலாளர் பிரபா ஆகியோர் கொழும்பில் கூடி மந்திராலோசனை நடத்தியிருந்தனர்.
எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,    தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செயற்படுவது என அக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அடுத்த கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.         இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இவர்களின் அணியில் சேர்த்துக் கொள்வதற்கும் அடுத்த கூட்டத்தில் பங்குபற்ற வைப்பதற்கும் பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.      அமைச்சர் தேவானந்தா இது சம்பந்தமாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அத்தொலைபேசி உரையாடல் நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தது என்று அவர் நேற்று முன்தினம் பி.பி.சி. தமிழோசைக்குத் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவருடைய கொழும்பு வாசஸ்தலத்தில் புளொட் இயக்கத் தலைவர் ரி.சித்தார்த்தன்,   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி செயலாளர் நாயகமுமான எம்.சிவாஜிலிங்கம் ஆகியோர் இரா.சம்பந்தனுடன் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
இப் பேச்சுக்களின் போது எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ள தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.       இந்த விடயம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேசுவார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிபைத் தெரிவிப்பார் என்றும் இவர்களுக்கு இரா.சம்பந்தன் பதிலளித்தார்.
இத் தகவலை புளொட் இயக்கத்தலை வர் ரி.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.சிவாஜிலிங்கம் ஆகியோர் உறுதிப்படுத்தினார்கள்.


comments: 
தமிழ் மக்கள் ஒற்றுமைபட்டுவிடகூடாது என்று எந்த இனவாதியையும் விட சில தமிழ் பிரதிநிதிகளும் புலம்பெயர் புலிப்பினாமிகளும் துலாக்காவடி எடுக்காத குறையாக நேர்த்திக்கடன் செய்வது எல்லோரும் அறிந்தததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக