செவ்வாய், 15 ஜூன், 2010

யார் எதிர்த்தாலும் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.திசநாகா

 யார் எதிர்த்தாலும் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.திசநாகா கருத்து வெளியிட்டார்.
ஏற்கனவே எழுபத்து எட்டு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பல இன்னும் தரமான கல்வியை வழங்கவில்லை என்றும் புகார் வந்த்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.விரைவில் அவை உரிய கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும்.
தற்போது தகுதி பெற்றவர்களில் 22000 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பல்கலைகழங்கள் போதிய அளவு திறக்கப்பட்ட பின்பு அடுத்த 20000 மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.
ஏராளமான பெற்றோர்கள் லட்சக்கணக்கான பணத்தினை செலவு செய்து வெளிநாட்டு பல்கலை கழகங்களில் அனுமதி பெறுகின்றனர்,பலர் போலியான நிறுவனங்களால் ஏமாற்றப்படுகின்றனர்.இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக