திங்கள், 28 ஜூன், 2010

நித்யானந்தா ஆன்மிகத்துடன் அரசியல், செக்ஸ், பணம், மதம் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டதைப் போல தோன்றினாலும

இன்டர்நெட் மூலம் என்னுடைய சொற்பொழிவுகளை அதிகம் பேர் கேட்டு பயன்பெற்றனர். இன்று என்னை பற்றிய செய்தி இன்டர்நெட் மூலம்  அதிகம் பேரால் பார்க்கும்படி ஆகிவிட்டது. ஆன்மிக  விஷயத்தில் நான் அப்படியே தான் இருக்கிறேன். சமுதாய ரீதியில் என்னை பற்றிய பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.என்னுடைய யோகா வகுப்பில் இதுவரை 23 லட்சம் பேர் கலந்து கொண்டு பலனடைந்துள்ளனர். பிடதியில் உள்ள ஆசிரமத்தில் எட்டு முதல் 80 வயதுள்ள பெண்கள் தங்கியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் என் மீது, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என, சி.ஐ.டி., போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். இதுநாள் வரை ஒரு பெண் கூட என் மீது புகார் தெரிவிக்கவில்லை. என் மீது உண்டான களங்கத்தை போக்கிக்கொள்ள நான் அவசரப்படவில்லை. மூன்று மாதத்தில் மக்கள் என்னை பற்றிய உண்மையை உணர்ந்து கொண்டனர். உண்மை தானாக ஒரு நாள் வெளிவரும்.

அரசியல், செக்ஸ், பணம், மதம் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டதைப் போல தோன்றினாலும் ஆன்மிகத்துடன் இவைகள் சேர்ந்தால் எல்லாம் புனிதமாகி விடும். என்னை பற்றிய வதந்திகளால் என்னுடைய ஆதரவாளர்கள் கொதிப்படைந்தனர். இந்த பிரச்னையால் சில படிப்பினைகள் கிடைத்துள்ளன. வதந்திகளால் நான் மனம் கலங்கவில்லை. மன உறுதியோடு இருக்கிறேன்.என்னை பற்றிய வதந்தியை நம்பிய சிலர், ஆசிரமத்தை புறக்கணித்துச் சென்றனர். தற்போது உண்மை உணர்ந்து பலரும் மீண்டும் ஆசிரமத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.என் மீது நம்பிக்கை கொண்டவர்களும், சீடர்களும் தொடர்ந்து  நான் போதிக்கும் யோக நெறியை பின்பற்ற விரும்புகின்றனர். என்னுடைய வழிகாட்டுதல் அவர்களுக்கு தேவைப்படுகிறது. நான் போதனைகள் செய்யக்கூடாது என, கோர்ட் தடை விதித்துள்ளதால், அவர்களுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து வருத்தமடைந்துள்ளேன். விரைவில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு நித்யானந்தா கூறினார்.ரஞ்சிதாவுடன் இன்னும் தொடர்புள்ளதா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக