நித்யானந்தா நடிகை ரஞ்சிதா வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகை ரஞ்சிதா தலைமறைவாகி விட்டார். நித்யானந்தா மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக ரஞ்சாவிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனாலும் ரஞ்சிதா கடைசி வரை ஆஜராகவில்லை. அவரை பற்றி தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் அவர் இருப்பிடம் கடைசிவரை தெரியாமலே இருந்தது.
ஆனால் அவர் இந்த மாதம் தொடக்கத்தில் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வந்து உள்ளது. சென்னையில் ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
இதுவரை நீண்ட கூந்தலுடன் சேலை அல்லது சுடிதாருடன் காட்சியளித்து வந்த அவர் இப்போது முற்றிலும் மாறி இருக்கிறார். முடியை பாப் கட்டிங் செய்து டீசர்ட் மற்றும் ஜீன்சில் மாடல் பெண் போல காட்சி அளிக்கிறார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
சாமியார் நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எனது மனதில் ஏற்படுத்திய காயங்கள் ஆகியவற்றை விவரித்து நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்.
இந்த புத்தகம் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். இந்த புத்தகங்களை வெளியிட சில பதிப்பகங்களுடன் நான் பேசி வருகிறேன்.
இதுதவிர நான் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு நாவலும் எழுதுகிறேன். இதில் எனது அனுபவம் பற்றி எழுதும் புத்தகம்தான் முதலில் வெளிவரும்.
எனது அறையில் ஒரு யோகியின் சுயசரிதை புத்தகம், மததலைவர் ஒருவருடைய ஆன்மீக புத்தகம் ஆகியவற்றை எப்போதும் வைத்துள்ளேன்.
நான் எப்போதுமே ஒரு புத்தக புழு. எந்த நாவல்களையும் விரும்பி படிப்பேன். இப்போது தத்துவ புத்தகங்களுக்கு மாறிவிட்டேன். குறிப்பாக இந்திய ஆன்மீக புத்தகங்களை விரும்பி படிப்பேன்.
நான் தலைமறைவான விஷயங்கள் குறித்தோ அல்லது கடந்த கால சம்பவங்கள் குறித்தோ பேச விரும்பவில்லை. கடந்த காலத்தை நினைத்து கொண்டிருக்க முடியாது. அதை விட்டு வெளியே வர விரும்புகிறேன்.
மன அழுத்தம், கஷ்டங்கள் என நான் மிகவும் காயப்பட்டு விட்டேன். அதை விட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல விரும்புகிறேன். எனக்கு எதிராக பல செய்திகள் பரப்பப்பட்டு விட்டன. நான் கொடுத்த பேட்டியையும் திரித்து வெளியிட்டு விட்டார்கள். இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.
நடிகை என்றால் இது போன்ற கஷ்டங்களை தாங்கி கொள்வார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். என் கணவர், சகோதரிகள், பெற்றோர் மற்றும் உறவினர் கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து என் கஷ்டங்களை தாங்க வைத்து விட்டனர்.
நான் நடித்த ராவணன் படத்தை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றியும் சிந்திக்க வில்லை. சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுக்க விரும்புகிறேன். நடிக்காத நேரங்களில் நான் மற்ற ராணுவ வீரர்கள் மனைவிகள் போல சமூக சேவையில் ஈடுபடுவேன்.
நான் சமீப காலங்களில் முக்கிய நபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நான் சகஜ நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஆகும் என நினைக்கிறேன். என காலடியை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து வைக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
பெங்களூர் போலீசார் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி இருப்பதை அடுத்து போலீஸ் முன் ஆஜராகவும் திட்டமிட்டு உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக