சனி, 19 ஜூன், 2010

குவைத்் இளவரசர், உறவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குவைத் நாட்டின் இளவரசர், சேக் பாசெல் அல் சலேம், அவரது உறவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம், தங்களது மாளிகையில் உள்ள கார்களை உபயோகப்படுத்துவது தொடர்பாக இவரது மாவாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, வாக்குவாதம் முற்றவே, திடீரென துப்பாக்கியை எடுத்த மாமனார்,       இளவரசரை சுட்டுக்கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் குவைத் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     இது குறித்து விசாரணை நடத்த குவைத் அரசும் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே    இளவர் சேக் பன்சேல் அல் சலேமின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்கும் போது அவருக்கு வயது 52.அல் சலேம்,  1965 ம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை குவைத்தின் 12 வது மாமன்னராக இருந்த சேக் சபாவின் பேரனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாராவாரம், தமது உறவினர்களை சந்திக்கும், வழமையான இடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மாமனாரினால் பல தடவை சுடப்பட்டு, மருத்துமன்வனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக