வெள்ளி, 4 ஜூன், 2010

நடிகர் விவேக் ஒபரோய் சிறுவர்,சிறுமியர்களுக்கென வவுனியாவில் பாடசாலையொன்றை அமைக்கவுள்ளதாக

இலங்கையில் யுத்தத்தால் தமது இள¨மைப் பருவம் சூறையாடப்பட்ட சிறுவர்,சிறுமியர்களுக்கென வவுனியாவில் பாடசாலையொன்றை அமைக்கவுள்ளதாக பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் தெரிவித்தார். சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நிறைவுபெற்றதும் வவுனியாவுக்குச் சென்று இப்பாடசாலையை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற் கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது.
முதலாம் நாளான நேற்றுக் காலை கொழும்பு, கொள்ளுப்பிட்டி சினமன்கார்டன் ஹோட்டலில் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விவேக் ஒபரோய் இதனைத் தெரிவித்தார். தமிழ் நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காய் தனது தந்தையின் ஒபரோய் பவுண்டேஷன் மூலம் உதவக்கிடைத்ததை நினைவு கூர்ந்த விவேக் ஒபரோய், அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கும் தனக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவுக்கு நான் இலங்கை செல்வதை அறிந்த இலங்கையில் உள்ள எனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகத்தினர் என்னை இலங்கை செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். இலங்கையில் தமிழர்களின் கஷ்டங்கள் தீர்க்கப்பட சர்வதேச இந்திய திரைப்பட அகடமி வழிசெய்ய வேண்டும் என்று என்னை வேண்டினர்.
அன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சிரார்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதயமானது. அதனை சர்வதேச இந்திய திரைப்பட அகடமியிடம் சொன்னேன் அவர்களும் அதற்குக் சம்மதித்தார்கள். அதன்படி வவுனியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான பாடசாலையொன்றை சர்வதேச இந்திய திரைப்பட அகடமி இலங்கை கிரிக்கெட் சபை என்பவற்றின் உதவியோடு நிறுவத் திட்டமிட்டிருக்கிறேன்.
இது கல்வி புகட்டும் நிலையமாக மாத்திரம் அல்லாது பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சுகாதார, போஷாக்கு நலனோம்புகை நிலையமாகவும் இருக்கும். இது பின்னர் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப் படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக