வியாழன், 17 ஜூன், 2010

காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் அலி,விழுப்புரம் குண்டுவெடிப்பில் சம்பந்தப்படுத்துகிறார்கள்:

்புலிகளை எதிர்ப்பதால் என்னை விழுப்புரம் குண்டுவெடிப்பில் சம்பந்தப்படுத்துகிறார்கள்:  அசன் அலி பேட்டி

விழுப்புரம் ரயில் தண்டவாளம் குண்டுவைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில் ஈழத் தமிழர் ஆதரவாளர்களுக்கு தொடர்பு என்று
இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈழத் தமிழர் ஆதரவாளர்களுக்கு தொடர்பில்லை என்று வழக்கறிஞர்கள் 5 பேர் விழுப்புரம்
மாவட்ட டி.ஐ.ஜி-யிடம் புகார் மனுவை அளித்தனர்.
மேலும், பிரச்சனையை திசை திருப்ப தண்டவாளத்தைத் தகர்த்தது ஈழத்தமிழர்களின் எதிர்ப்பாளர்கள் எனறு தெரிவித்திருந்தனர்.
 ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் ராமநாதபுரம் காங்கிரஸ்  எம்.எல்.ஏ. அசன் அலிக்குத் தொடர்பு இருப்பதாக கூறி இது குறித்து அசன் அலியிடம் விசாரணை நடத்த வேண்டும்  என்றும் வழக்கறிஞர்கள் தங்கள் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
தண்டவாளம் தகர்ப்பில் காங்கிரஸ் எம்எல்ஏ  அசன் அலிக்கு, தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களி‌டம் இருக்கிறது.
ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என்று கூறி மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் நக்கீரன் இணையதள நிருபர் ராமநாதபுரத்தில் அசன் அலியை சந்தித்தார்.
ரயில் தண்டவாள தகர்ப்பு வழக்கில் உங்கள் மீது வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்களே?
குண்டுவெடிப்பு நடந்த அன்று சென்னையில் இருந்து நான் ராமநாதபுரத்திற்கு ராமேஸ்வரம் ரயிலில் வந்தேன்.  நான் அந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்படிருந்தால் நானே எப்படி ரயிலில் வருவேன்.
பயங்கரவாத இயக்கங்களை நான் கடுமையாக எதிர்த்து வருகிறேன்.   விடுதலைப்புலிகள் அமைப்பையும் நான் கடுமையாக எதிர்த்து வருகிறேன்.   அன்னை சோனியாவே மன்னித்தாலும் நான் அந்த அமைப்பை மன்னிக்க மாட்டேன்.   அந்த அளவிற்கு கடுமையாக எதிர்த்து வருவதால்தான் ஈழ ஆதரவாளர்கள் இப்படி ஒரு புகாரை கொடுத்திருக்கிறார்கள்.
உளவுத்துறை, கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அப்போது உண்மை தெரியவரும்.

வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு சம்பந்தமாக போலீசார் உங்களிடம் விசாரணை மேற்கொண்டார்களா?
இது வரை போலீசார் என்னை அந்த புகார் சம்பந்தமாக விசாரிக்கவில்லை.    அந்த புகாருக்கு எதிராக நான் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
இந்த குண்டு வெடிப்புசம்பவம் ஏன் நடந்தது என்று நினைக்கிறீர்கள்?
செம்மொழி மாநாட்டைசீர்குலைக்கத்தான் இந்த சதி நடந்துள்ளது.  மேலும், ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டுத்துதான் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக