புதன், 16 ஜூன், 2010

தீவிரவாத ஒழிப்பு: இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு

தீவிரவாத ஒழிப்பு: இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு
கொழும்பு, ஜூன்15: தீவிரவாதத்தை ஒழித்ததற்காக இலங்கை அரசுக்கு அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை உடனான உறவை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.   அமெரிக்க அதிபர் ஓபாமாவின் பன்முனைச் செயலர் சமாந்த பவர் மற்றும் போர் குற்றங்களின் இயக்குனர் டேவிட் பிரஸ்மேன் ஆகியோர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை செவ்வாய்க் கிழமை சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது, கடந்த மே மாதம் நடைபெற்ற போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றதை அமெரிக்க அதிபர் பாராட்டியதாக கூறினர். அமெரிக்காவும் தீவிரவாதத்தால் பாதிப்புக்குள்ளான நாடு என்று தெரிவித்தனர். இலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையேயான உறவுகள் மேம்படவேண்டும் என்றும் இருநாடுகளும் விருப்பம் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக