திங்கள், 7 ஜூன், 2010

அழுகிய மீன்களை சாப்பிடும் குமரி மக்கள்

குமரி மாவட்ட மக்களுக்கு முக்கியமான உணவு மீன் ஆகும். மீன் இல்லாத உணவே இல்லை என்ற நிலையில் மதியமும், இரவு நேரமும் குமரி மக்கள் மீனை பயன்படுத்தி வருகின்றனர்.

குமரி மாவட்ட கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் இங்குள்ள மக்கள் நல்ல மீன்களை சமைத்து சாப்பிட்டு வந்தனர்.

தற்போது நிலமை மாறி உள்ளது. இங்கு நல்ல மீன்கள் கிடைப்பது இல்லை. அழுகிய மீன்கள் தான் சப்ளை செய்யப்படுகிறது. சில மீன்கள் மாத கணக்கில் ஐஸ்சில் வைத்து விற்கப்படுவதாக கூறப்படுகின்றது. இதனை குமரி மாவட்ட மக்கள் வாங்க வேண்டிய மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மீன்கள் சாப்பிட ருசியாக இருப்பதில்லை. இந்த மீன்கள் மூலம் நோய் பரவுமோ என்ற அச்சமும் மீனை பயன்படுத்தும் மக்கள் மனதில் உள்ளது. இதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து நோயில் இருந்து மக்களை காப்பாற்றினால் நல்லது என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக