ஞாயிறு, 27 ஜூன், 2010

கலைஞர,் செம்மொழி மாநாடு நிறைவு விழா: என்ன பேசப் போகிறார் ்: தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பு

கோவையில், கடந்த 23ம் தேதி முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து வருகிறது. செம்மொழி மாநாடு முதல்வர் கருணாநிதி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதுபோல ஒரு மாநாட்டை இதுவரை பார்த்ததில்லை, என அமெரிக்கா, கனடா, ரஷியா, பின்லாந்து, நெதர்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களும் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள லட்சக்கணக்கான தமிழர்களும், கேட்டுக்கொண்டதற்கு இணங்க இனியவை 40 அலங்கார ஊர்திகளை மாநாடு முடிந்தும் ஒரு வாரம் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழிக்கு செம்மொழி சிறப்பு கிடைத்த பின் நடக்கும் முதல் மாநாடாகவும் அமைந்திருப்பதால், இந்த மாநாடு சிறப்பு பெற்றுள்ளது. "தமிழை மென்மேலும் வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அரசுக்கு ஆணையிடுங்கள்; செய்ய காத்திருக்கிறோம்' என, தமிழறிஞர்களுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். மேலும், "மாநாட்டின் இறுதி நாளன்று, பட்ஜெட் அறிவிப்பு போல் எனது உரை அமையும்' என்றும் முதல்வர் கூறினார். இதனால், முதல்வர் இன்று என்ன அறிவிக்கப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள, தமிழக மக்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

இந்த மாநாட்டின் மூலம் உலகத்தமிழர்களுக்கு அவர் என்ன அறிவிக்கப்போகிறார் என்று உலகத்தமிழர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக