வெள்ளி, 25 ஜூன், 2010

தமிழை தலைநிமிர வைத்தவர் கலைஞர் என்று முஸ்லிம் லீக் மாநில செயலாளர்

தமிழை தலைநிமிர வைத்தவர் கலைஞர் என்று முஸ்லிம் லீக் மாநில செயலாளர் முகமது ரபி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக அரங்கில் தமிழ் ஒய்யாரமாகத் திகழ்கிறது. செம்மொழி அந்தஸ்து பெற்று இமயமாய் உயர்ந்து நிற்கிறது. அனைவரது பார் வைக்கும் ஆனந்த ஜோதியாய் ஜொலிக்கிறது. அத்தகைய தமிழுக்கு விழா நடத்தி மேலும் மெருகூட்டிய பெருமை, நம் தமிழக முதல்வர் கலைஞர் ஒருவருக்கே உரித்தாகும்.

நமது முதல்வர் கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அரும்பாடுபட்டு, வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும், இந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழர்களாகிய ஒவ்வொருவரும் பங்கு கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி குடும்பத்துடன் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கொங்கு சீமையில் சிங்காரத்தமிழுக்கு நடக்கும் வசந்த விழாவை நாமும் கரம் கோர்த்து வெற்றியடைய செய்ய வேண்டும். தமிழகத்தின் தலைவர் கலைஞர் நடத்தும் இச்செம்மொழி மாநாடு மாபெரும் வெற்றியடைந்தது கண்டு பூரிப்படைவோம்.

இந்த நூற்றாண்டில் இதுபோன்ற வெற்றி விழா நடத்துவது மிகவும் அரிது. அத்தகைய வெற்றி விழாவை மேலும் வெற்றியடைய செய்வதில் நமக்கு பெரும் பங்கு இருக்கிறது. தமிழன்னையை நேசிக்கும் ஒவ்வொருவரும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவர் தாவூத் மியான்கானுடன் இணைந்து தமிழுக்கு குரல் கொடுப்போம். தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி தமிழன் பெருமையை கொண்டாடி மகிழ்வோம். தமிழக முதல்வரின் கரத்தினை வலுப்படுத்துவோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக