வெள்ளி, 25 ஜூன், 2010

கவிழ்ப்பது காங்கிரசின் கலாசாரம்,என்ன தான் நெருக்கமாக இருந்தாலும், கடைசியில் காங்கிரஸ் தன் வேலையைக்

தி.மு.க., - பா.ம.க.,விற்கு காங்கிரஸ் செக்
என்ன தான் காங்கிரசுக்கு நெருக்கமாக இருந்தாலும், கடைசியில் காங்கிரஸ் தன் வேலையைக் காண்பித்துவிடும் என்பது அக்கட்சியுடன் நெருக்கமாக உள்ள அனைவருக்குமே தெரியும். உடன் இருந்தே ஆளைக் கவிழ்ப்பது காங்கிரசின் கலாசாரம். இந்த பாணியை தமிழக அரசியல் கட்சிகள் மீதும் காங்கிரஸ் செயல்படுத்தியுள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.தி.மு.க., அமைச்சர் ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, தற்போது தொலைத் தொடர்பு அதிகாரிகள் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. சி.பி.ஐ., விவகாரத்தை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இன்னொரு பக்கம் பா.ம.க.,விற்கு செக் வைத்துள்ளது காங்கிரஸ். மீண்டும் தி.மு.க., - காங்., கூட்டணியில் இணைய பா.ம.க., விரும்புகிறது. இதை தடுக்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது. அன்புமணி அமைச்சராக இருந்த போது அவர் மீதும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. சமீபத்தில் மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாயை சி.பி.ஐ., கைது செய்தது. கோடிக்கணக்கில் தேசாய் பணம் வாங்கியுள்ளார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அன்புமணியையும் சம்பந்தப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக