திங்கள், 28 ஜூன், 2010

்கருணாநிதி,ரிடையர ஆவேன் என்று சொல்லவே இல்லையே, அந்த வார்த்தையை


செம்மொழி மாநாடு முடிந்ததும் அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்த முதலமைச்சர் தற்போது தாம் அப்படி சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிவடைந்தையொட்டி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கருணாநிதியிடம், செம்மொழி மாநாடு முடிந்ததும் அரசியலிலிருந்து 'ரிடையர்' ஆவேன் என்று சொன்னீர்கள்.இப்போதும் அந்த திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கருணாநிதி,'ரிடையர்'( ஓய்வு பெறுவேன்) ஆவேன் என்று சொல்லவே இல்லையே, அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லையே எனக் கூறினார்.

அரசியலிலிருந்து சற்றே விலகியிருப்பேன் என்று கூறியிருந்தீர்களே...? செய்தியாளர்கள் மறுபடியும் கேட்டபோது," நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சொன்னால் இப்போதே விலகி விடுகிறேன்" என்றார்.

உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என கூறியிருக்கிறீர்களே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது," உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என நான் கூறியதற்கு ஓய்வு பெற போவதாக அர்த்தம் இல்லை. நான் ஓய்வுபெற வேண்டும் என நீங்கள் (செய்தியாளர்கள்) கூறினால் ஓய்வு எடுக்க தயாராக உள்ளேன்" என்று அவர் கூறினார்.

செம்மொழி மாநாட்டுக்காக கைதிகளை விடுவிப்பதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, " செம்மொழி மாநாட்டிற்காக கைதிகளை விடுவிக்கப் போவதாக அரசு சார்பில் அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்கப்பட்டதாக எந்த ஏடுகளுக்கும் அரசு சார்பில் தெரிவிக்கவில்லை.ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எதை நம்பி, யாரை நம்பி இப்படி அறிக்கை விடுத்தார் என்று தெரியவில்லை" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக