செவ்வாய், 29 ஜூன், 2010

பீடி கேட்டு கைதிகள் உண்ணாவிரதம்


சேலம் மத்திய ஜெயிலில் கைதிகள் பீடி கேட்டு உண்ணாவிரதம் இருந்தனர்.
இவர்களை யார் தூண்டி விட்டனர் என்று சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர
்.
இவர்களில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரும், ரிமாண்ட் கைதிகள் சிலரும் நேற்று பீடி  கேட்டு திடீர் என சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தனர். மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கைதிகள் சாப்பிடவில்லை.

இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த சேலம் மத்திய சிறை கூடுதல் சூப்பிரெண்டு முனியாண்டி, ஜெயிலர் ராஜமனோகரன், துணை ஜெயிலர் செங்கான் மற்றும் சிறை அதிகாரிகள் உண்ணாவிரதம் இருந்த கைதிகளை சமாதானம் செய்தனர்.

 இதனால் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை மாலையில் முடித்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக