வெள்ளி, 11 ஜூன், 2010

நாளை ரிலீஸ் நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன்-50 நாள் சிறை வாசத்துக்குப் பின் நாளை ரிலீஸ்

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்து, அதைத் தொடர்ந்து பதிவான வழக்குகளில் கைதான நித்யானந்தாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதன்படி அவர் பிடுதி ஆசிரமத்தை விட்டு வெளியே போகக் கூடாது, சொற்பொழிவு நிகழ்த்தக் கூடாது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 25 நாட்களுக்கு ஒரு முறை பிடுதி காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட நித்யானந்தா, ஏப்ரல் 23ம் தேதி பிடுதி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 50 நாட்களுக்குப் பின் இப்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிமன்ற-காவல்துறை சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து நித்யானந்தா நாளை விடுதலையாகிறார்.

ஜாமீன் வழங்கிய தீர்ப்பளித்த நீதிபதி கூறுகையில், நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மையானது தான் என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தன்னை சாமியார் என்று நம்பிய மக்கள், பக்தர்களின் மனதை புண்படுத்திய நித்யானந்தாவின் செயல் கண்டனத்துக்குரியது என்றார்.

முன்னதாக இந்த ஜாமீன் மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் சதீஷ், வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணை முடிந்துவிட்டதால் நித்யானந்தாவை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்றார்.

நித்யானந்தா சாமியார் அல்ல-வழக்கறிஞர்

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தா தன்னுடன் பெண்ணை காரில் அழைத்து செல்வது அவருடைய பக்தர்கள் மனதை காயப்படுத்துவதாக ஆகாதா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் ஆச்சார்யா,
  Read:  In English 
நித்யானந்தா, சாமியார் அல்ல. அவர் தன்னை ஒருபோதும் சாமியார் என்று சொல்லிக்கொண்டது இல்லை. சில ஆசிரமங்களில் குடும்ப வாழ்க்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே நித்யானந்தாவையும் சாதாரண மனிதராகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கையும் சாதாரண விஷயமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். நித்யானந்தா தொடர்பாக வெளியான சி.டி. போலியானதாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக