சனி, 5 ஜூன், 2010

இந்தியாவிலிருந்து 500 பஸ்களை இ.போ.ச.வுக்குக் கொள்வனவு செய்யவுள்ளதாக

இந்தியாவிலிருந்து 500 பஸ்களை இ.போ.ச.வுக்குக் கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் எம்.டி. பந்துசேன கூறினார். அடுத்த வருடம் மேலும் 1000 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்குடனும் தனியார் துறைக்குப் போட்டியாக இ.போ.சபையை பலப்படுத்துவதற்காகவும் கூடுதலான பஸ்களைத் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் தருவிக்கப்படவுள்ள பெரிய ரக ‘அசோக் லேலண்ட்’ பஸ்கள் பிரதான வீதிகளிலும், கிராமப்புற வீதிகளிலும் ஈடு படுத்தப்பட உள்ளதோடு, மீள் குடியேற்றம் நடத்தப்பட்ட பகு திகளிலும் ஈடுபடுத்தப்படும் எனவும் இ.போ.ச. தலைவர் கூறினார்.இதுதவிர யாழ்ப்பாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக சொகுசு பஸ்களை தருவிக்கவும் இ.போ.ச. திட்டமிட்டுள்ளது. வடக்கில் மீள்குடி யேற்றப்பட்ட பகுதிகளில் 300க்கும் அதிகமான பஸ்கள் ஏற்கெனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக