சென்னை: தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப் போட்டு 3வது முறையாக ரயிலை கவிழ்க்க மர்ம ஆசாமிகள் சதி செய்துள்ளனர். தனியாக வந்த இன்ஜின் சிலாப் மீது மோதியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தமிழகத்தில் ரயிலை கவிழ்க்க அடுத்தடுத்து நடந்த சதி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த 12ம் தேதி நள்ளிரவு, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சித்தணியில் வெடிகுண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இன்ஜின் டிரைவர், நிலைய ஊழியரின் சாமர்த்தியத்தால் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், பெரிய விபத்தில் இருந்து தப்பியது.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பின
சிமென்ட் சிலாப் மீது இன்ஜின் மோதியது அதிகாலை 3.20 மணிக்கு. அதன்பிறகுதான் சென்னைக்கு வரிசையாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும். சரியான நேரத்தில் சதி கண்டுபிடிக்கப்பட்டதால் 3.40 மணி முதல் அடுத்தடுத்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஏற்காடு, சேரன், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை, திருவனந்தபுரம், மங்களூர் மெயில் உள்ளிட்ட ரயில்கள் விபத்தில் இருந்து தப்பின.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக