செவ்வாய், 15 ஜூன், 2010

நேபாள, உலகிலேயே மிக உயர சிவன் சிலை ,143 அடி

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு அருகே சாங்கா நகரம் உள்ளது.             அங்கு 4 லட்சம் சதுரஅடி பரப்பளவில் ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
அதில் வீடுகள் மற்றும் 16 நவீன அறைகளுடன் கூடிய தங்கும் விடுதி, யோகா, சுகாதார கிளப்புகள், தியான மையம் மற்றும் அழகிய நீருற்றுகள் கட்டப்பட்டுள்ளது.
குழந்தைகள் மையம், பிசியோதெரபி சிகிச்சை மையம் போன்றவையும் உள்ளது.
இவை அனைத்துக்கும் புகழ் சேர்க்கும் வகையில் இங்கு 143 அடி உயரத்தில் மிக பிரமாண்டமான சிவன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிக உயர மானதாகும்.
இதற்கு கைலாஸ்நாத் மகாதேவ் சிலை என பெயரிடப்பட்டுள்ளது. இது சிமெண்டினால் தயாரிக்கப்பட்டுள்ளது. துத்த நாகம் மற்றும் காப்பர் உலோகத்துடன் இரும்பு தாது கலந்து அதன் மீது பூசப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு விழா வருகிற 21-ந்தேதி நடக்கிறது. சிலையை ஜனாதிபதி ராம்பரன்யாதவ் திறந்து வைக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக