வெள்ளி, 11 ஜூன், 2010

12 வருட கடூழிய சிறைத்தண்டனை இலங்கையர் மூவருக்கு ஜேர்மன் நாட்டு நீதிமன்றம் ஒன்று நேற்று சிறைத்தண்டனை

படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருக்கும் இலங்கையர் மூவருக்கு ஜேர்மன் நாட்டு நீதிமன்றம் ஒன்று நேற்று சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. பிரதான எதிரிக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய இருவருக்கும் 6 வருடங்களுக்கு குறையாத கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இருவரும் சகோதரர்கள் ஆவர்.
படுகொலை செய்யப்பட்டவர் இந்த இருவரினதும் சகோதரி உடைய காதலன் ஆவார். இக்காதல் ஜோடிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. காதலன் காதலியை அடித்து விட்டார். காதலி இதை இரு சகோதரர்களுக்கும் சொன்னார். இரு சகோதரர்களும் சகபாடியை அழைத்துக் கொண்டு சகோதரியின் காதலனைத் தேடிச் சென்றனர்.அவருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
சகோதரர்களின் சகபாடி சுட்டதில் அப்பெண்ணின் காதலர் தலையில் காயம் அடைந்து இறந்து விட்டார்.இச்சம்பவம் கடந்த வருடம் மே 17 ஆம் திகதி ரினெலாண்ட் நகரில் இடம்பெற்றிருந்தது. ஆனால் இவர்களுக்கு மிகக் குறைவான தண்டனையே வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் என்றும் அநநாட்டு சட்டமா அதிபர் திணைக்கள்ம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக