ஞாயிறு, 13 ஜூன், 2010

கோர்ட் நேரத்தை வீண் அடித்ததற்காக சமூக சேவகர் 'டிராபிக்' ராமசாமிக்கு ரூ. 10,000 அபராதம்

பதிவு செய்தவர்: ராஜா பிரான்ஸ்
பதிவு செய்தது: 13 Jun 2010 6:50 pm
ராமசாமி அவர்களே இதனால் மனதலற்சியடையாமல் உங்கள் சேவையை திடர்ந்து செய்யுங்கள்

பதிவு செய்தவர்: பொது janam
பதிவு செய்தது: 13 Jun 2010 6:39 pm
இன்னிக்கு சட்டம் தெரியாத கண்ட கண்ட நாய்களெல்லாம் நீதி அரசர்கள் ! நீதி அரசனே கொள்ளை அடிக்கிறான்(தினகரன்). லஞ்சம் வாங்கறான். நாடு எப்படி உருப்படும் ?

சென்னை: கோர்ட் நேரத்தை வீணடிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், சென்னை பாரி முனையில் என்.எல்.சி. போஸ் சாலை, பந்தர் தெரு, மலைய பெருமாள் தெரு ஆகிய பகுதிகளில் நடக்கும் பட்டாசு விற்பனையை பாதுகாப்பு நலன் கருதி அதை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டுமென கூறி இருந்தார்.

இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர், ஏற்கனவே 2008-ம் ஆண்டு இம்மாதிரி வழக்கிற்கு இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் பின்பற்றாததால் மீண்டும் இந்த வழக்கை தொடர்ந்ததாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில்,

இந்த பிரச்சினை தொடர்பாக 2008-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கிற்கு உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்திய வெடிபொருட்கள் சட்டத்தை போலீஸ் கமிஷனர் முறையாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

இதை போலீஸ் கமிஷனரோ மற்ற அதிகாரிகளோ சரியாக பின்பற்றவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருக்கலாம். அதற்கு மாறாக அவர் புதிய வழக்கு தொடர்ந்ததால் நீதிமன்ற நேரத்தை வீண் அடித்ததற்காக டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கிறது. மேலும் இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக