திங்கள், 31 மே, 2010

தயார் தயார் உதவியை வழங்கத் தயார்.TNAஇரா.சம்பந்தன்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் தயார் எனில், நாடாளுமன்றத்தில் அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான உதவியை வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே நடைபெற்றுவரும் இரகசிய பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து கேட்டபோதே அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் தீர்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சினைகள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் இணக்கமின்றி முடிவடைந்ததாகவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டணிப்பு தயாராக இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள இரா.சம்பந்தன், வடமாகாண சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கவேண்டியதன் முக்கியம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொடியின் கீழ் இணையவிரும்பும் எந்தவொரு தமிழ் குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிய சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக