திங்கள், 24 மே, 2010

மூன்று பிரிவாக செயல்படுகின்றனர். ருத்திரகுமார் ,நெடியவன் தலைமையில் நார்வேயை

நாடு கடந்த அரசை ஏற்படுத்துவது தொடர்பாக வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.   அவர்கள் மூன்று பிரிவாக செயல் பட்டு வருகின்றனர்’ என,  அமைச்சர் கருணா கூறியுள்ளார்.
இலங்கை புனரமைப்புத்துறை இணை அமைச்சரும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவருமான கருணா அம்மன் கூறியதாவது: இலங்கைக்கு வெளியில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் சிலர், நாடு கடந்த அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.                       இவர்களுக்குள் கடுமையான கருத்து வேறுபாடு உள்ளது.
இவர்கள் மூன்று பிரிவாக செயல்படுகின்றனர்.      ருத்திரகுமார் தலைமையில் அமெரிக்காவை மையமாக கொண்டு ஒரு பிரிவும், நெடியவன் தலைமையில் நார்வேயை மையமாக கொண்டு ஒரு பிரிவும், லண்டனை மையமாக கொண்டு ஒரு பிரிவும் செயல்பட்டு வருகின்றன.
இலங்கையில் வாழும் தமிழர்களின் ஆதரவு இல்லாமல், இவர்களால் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது.   விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் முன்னர்                  நடைமுறைக்கு ஒவ்வாத தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.
இத்திட்டம் இறுதி வரை நிறைவேறவில்லை. நாடு கடந்த அரசு என்ற தற்போதையை திட்டமும் இதுபோல் தான் இருக்கும். இந்த திட்டமும் நிறைவேற வாய்ப்பு இல்லை.                   இவ்வாறு கருணா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக