கடந்த பொதுத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேகாலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக் கொள்ளவிருந்ததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்ட தமிழ்பெண் இதற்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் சுஜீவ நிஷாங்கவிடம் மேலதிக விசாரணை அறிக்கையை சமர்பித்து வாதங்களை முன்வைத்த காவல்துறையினர் சந்தேகநபர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தி;ன் பேரில் ராசதுறை சம்பா அல்லது ஜெஸ்மின் அல்லது சத்தியா என்று அழைக்கப்படும் இந்த சந்தேகநபர் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி நடத்தப்பட்ட தேடுதலின் போது கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர். இவர் விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சிகளை பெற்று பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 2007ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டார் இதன்பின்னர் சந்தேகநபர் வவுனியாவில் உள்ள டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் கையளிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து அவர் விடுதலைப்புலியான தனது சகோதரருடன் கிளிநொச்சிக்கு சென்றிருந்ததாக தகவல்கள் கிடைத்ததாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர். கிளிநொச்சியில் இருந்தபோது இராணுவ சிப்பாய் ஒருவருடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள சந்தேகநபர் அவருடன் கேகாலைக்கு சென்றிருந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷவின் தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கைது செய்யப்பட்டார் சந்தேகநபரின் உடலில் ஆறிய காயங்கள் காணப்பட்டதாகவும் இவை துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்டிருக்ககூடும் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாரணைகள் குறித்த மேலதிக அறிக்கையை எதிர்வரும் 11ம் திகதி சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக