செவ்வாய், 18 மே, 2010
முட்டாள்தனம வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை நீக்குவது ் - பாதுகாப்புச்செயலாளர்..!
ஓராண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் வெற்றிகண்டுள்ள நிலையில் இனி வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை நீக்கவேண்டும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை விடுத்தனர் ஆனால் இந்தகோரிக்கைக்கு பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையிலேயே கோத்தபாய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தினரை விலக்கிக்கொள்வது என்பது விடுதலைப்புலிகள் மீண்டும் குழுக்களாக உருவாக்குவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்திவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார் வன்னிப் பகுதியிலுள்ள பாரிய காடுகளிலேயே விடுதலைப்பலிகள் ஆரம்பகட்ட கொரில்லாபோர் முறைகளின்போது ஒளிந்திருந்த தமக்கு சாதகமாக அதை பயன்படுத்தினர் இவற்றை இராணுவத்தினர் வைக்கவேண்டியது கட்டாயம் எனவும் பாதுகாப்புச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக