சனி, 22 மே, 2010

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் படத்துக்குத் தடை

சென்னை: ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள 'வெல் கேட் சினிமா பாக்ஸ்' என்ற நிறுவனம் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற படத்தைத் தயாரித்துள்ளது.

சிறுவர்களுக்கான இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் தயாரிப்பதற்காக அதன் தயாரிப்பாளர் சிலரிடம் கடன் பெற்றிருந்தார். இந்த நிலையில், இந்த படத்தை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டது. அதற்கு தடை கேட்டு பைனான்சியர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அதில் அவர், "என்னிடமிருந்து கடனாக பெற்ற ரூ.5 லட்சத்தை 19.10.2005 அன்று திரும்ப தருவதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். ஆனால் அதைத் தரவில்லை. அந்த தொகையை திருப்பி தருவதற்கு அவர் உறுதி அளித்தும் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. எனவே கடன் தொகையை திருப்பி தரும்வரை அந்த படத்தை வெளியிடக்கூடாது. ஆனால் கடந்த 21-ந் தேதி (நேற்று) அந்த படத்தை வெளியிடுவதாக பத்திரிகைகளில் தகவல் வந்தது. எனவே, அந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி டி. ஹரிபரந்தாமன் விசாரித்தார். 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்' படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் நேற்று வெளியாகவிருந்த இந்தப் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக