திங்கள், 31 மே, 2010

வரலாறு காணாத தோல்வியில் தமிழ் திரை உலகம்

இளையதளபதி விஜயின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து  தற்போது இனி  பொறுக்க முடியாது  என்ற நிலைக்கு விநியோகச்த்தர்களை தல்லயுள்ளது  ,ஆதி, குருவி,அழகிய தமிழ் மகன்,வில்லு, வேட்டைக்காரன்,சுறா என்று  சங்கிலி தோல்விகளால் தியேட்டர்
உருமையாலர்களும் இதர தயாரிப்புத் துறையினரும் நொந்து நூடில்ஸாகி உள்ளார்கள்.
தற்போது இத்தொல்விகளில் இருந்து கொஞ்சமாவது மீள்வதற்கு   ஒரு படத்தையாவது இலவசமாக செய்து தருமாறு விசையே கேட்கிறார்கள். அவர் சம்மத்தாலும் அவரது அப்பா சம்மதிப்பாரா என்பது பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இது ஒன்றும் சரிவராத பட்சத்தில் விஜய் இனி நடிக்க முடியாதவாறு ரெட் கார்டு போடப்படும் என்றும் தெரிகிறது.
விஜய்க்கு அடுத்தபடி ஜனனி கண்டிருப்பவர் ரஜனிதான். அளவுக்கு மீறிய பட்ஜெட்டால் வெள்ளை யானையாகி விட்டது எந்திரன்
இது தவிர மொத்த தமிழ் திரை  உலகமும் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையில் தான் உள்ளது. சுமார் நூற்றிச்சொச்சம் படங்கள் பப்படமாகி விட்டது. உண்மைல் அவர்கள் தற்போது நம்பி இருப்பது வெளிநாட்டு வெங்காய ரசிகர்களைத்தான். டாலர்களும் பவுன்களும் பிராங்குகளும் மாற்குக்களுமாவது தமிழ் சினிமாவை காப்பற்றுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக