உடுவில் மல்வம் பகுதியில் நேற்றிரவு இளம் பெண் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த ஜெ.கலைவாணி (வயது 19) என்பவரே வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டவராவார். இதுகுறித்து தெரியவருவதாவது:
இவர் தமது வீட்டிலிருந்து உறவினருடைய ஆட்களில்லாத வீட்டிலுள்ள வளர்ப்பு பிராணிக்கு வழமையாக உணவு கொண்டு செல்வதாகவும் நேற்றைய தினம் அவ்வாறு சென்றவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர் தேடிச்சென்றபோதே இவர் வெட்டுக்காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து இவரை உறவினர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சைக்கு வந்த பெண்ணிடமிருந்து தங்க நகைகள் அபகரிப்பு.14.05.10
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணின் நகைகளை வைத்தியசாலை சிற்றூழியன் சீருடையில் இருந்த ஒருவர் அபகரித்து சென்றதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சைப் பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்த அரசடி வீதி கந்தர்மடத்தைச் சேர்ந்த கிருஷ்ணர்த்தி தில்லைராஜேஸ்வரி (ஜயது 55) என்பவர் சிகிச்சைப் பிரிவுக்குள் பரிசோதனைக்காக உட்செல்ல முற்பட்டபோது அப்பகுதியில் வைத்தியசாலை சீருடையில் நின்ற ஒருவரே நகைகளை கழற்றி தந்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
குறித்த பெண்ணும் அவ்வாறு கழற்றிகொடுத்துவிட்டு பரிசோதனையின் பின்னர் வந்து பார்த்தபோது குறித்த நபர் தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து குறித்த பெண் போதனா வைத்தியசாலையில் முறைப்பாடு செய்ததுடன் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இச் சம்பவத்துடன் அவரது இரண்டு சோடி காப்புகளும் ஒரு சங்கிலியுமே களவாடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக