வெள்ளி, 14 மே, 2010

புலிகளின் மறுஅவதாரமே உலகத் தமிழர் பேரவை

நெடியவன் தலைமையில் இயங்கும் உலகத் தமிழர் பேரவையே தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுஅவதாரமெனவும் அமெரிக்காவை தளமாகக் கொண்டு விஷ்வநாதன் ருத்ரகுமாரின் தலைமையில் இயங்கும் அமைப்பு அல்ல எனவும் சிங்கப்பூரில் வசித்துவரும் பேராசிரியர். ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் யாழ் மேயரின் மகனான ருத்ரகுமார் அமெரிக்காவில் வசித்துவரும் ஒரு வழக்கறிஞர். எனவே அரசியல் பற்றிய தெளிவான அறிவு கொண்டதனால் அவர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கூடுமெனவும் ஆனால், மொஸ்கோவில் கல்வி கற்ற நெடியவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் எனவும் புலிகளின் நிதி விவகாரங்களை கவனித்து வந்த கெஸ்ரேவின் உதவியாளராகவும் கடமையாற்றியதாகவும் பேராசிரியர். ரொஹான் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நாடு கடந்த தமிழீழத்திற்காக வாக்களித்த அனைவரும் மற்றுமொரு நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் எனவும் இவர்களில் 90 வீதமானவர்கள் மீண்டும் இலங்கையில் குடியேரமாட்டார்கள் என்றும் பேராசிரியர். ரொஹான் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comments:

Anonymous,  May 12, 2010 7:59 PM  
உண்மையில், அந்த சுயநல நரிக்கூட்டத்தின் 90 அல்ல 100 வீதமானவர்கள் மீண்டும் இங்கு திரும்பி வந்து குடியேரமாட்டார்கள். வெளிநாடுகளில் பணத்திக்கும், ஆடம்பர வாழ்வுக்கும், வரட்டு கௌரவதிக்கும், கொத்தடிமைகளாக, அடிமட்ட இனமாக, வேற்று நாடுகளுக்கு, வேறு இனத்துக்கு கடுமையாக ஊழியம் செய்யும் தமிழர்களே! முக்கியமாக, அதிஉயர் தமிழ் பற்றார்களே!, அதிஉயர் தமிழ் உணர்சியாளர்களே!, தமிழ் அறிஞர்களே!, அறிவுக்கொளுந்துகளே! முதலில், நீங்கள், உங்கள் குடும்பத்துடன் இங்கு திரும்பி வந்து, எங்களைப்போல், எமது மண்ணில், எமது இனத்துடன் தன்மானத்துடன் வாழ உங்களில் யாரும் ரெடியா? அப்படிப்பட்ட உங்களுக்கு ஏன் தமிழீழம்? எதற்காக, நாடு கடந்து தமிழீழம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக