புதன், 12 மே, 2010

பிரச்சினைகளை வளர்ப்பதற்கே மேற்குலக நாடுகள் முயற்சித்தன - பாதுகாப்புச் செயலர் தெரிவிப்பு

இலங்கையில் பிரச்சினைகளை வளர்ப்பதற்கே மேற்குலக நாடுகள் முதன்மை கொடுத்தன. இந் நாடுகள் பிரபாகரனையும் முக்கிய சில தளபதிகளையும் காப்பாற்ற முயற்சி எடுத்தன. ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை. இதனாலேயே அவை இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றன எனப் பாதுகாப்புச் செயலளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இப் போரை வெற்றி கொள்வதற்குப் படை துறை, அரசியல், சமூக மற்றும் சர்வதேச ரீதியில் நாம் எதிர்கொண்ட பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழும் வழிகாட்டலின் கீழும் மேற்கொண்டோம் என கோத்தபாய ராஜபக்ச பிஸ்னஸ் ருடேயின் மே மாத இதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

விடுதலைப்புலிகளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்காக அவர்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பேச்சு வார்த்தைகளை நடத்தியது. ஆனால் விடுதலைப்புலிகள் இப் பேச்சு வார்த்தையில் இதயசுத்தியுடன் கலந்து கொள்ளாததால், அவர்கள் இராணுவ ரீதி யில் தோற்கடிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறுதி முடிபு எடுத்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றி கொள்வதற்குப் பல்வேறு வகையான நடவடிக்கைகளை நாம் திட்டமிட்டு மேற்கொண் டோம். 30 வருட காலப் போரின் போது கடந்த கால அரசுகள் விட்ட தவறுகளை இனங் கண்டு தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றி கொள்வதற்கு உறுதியான படைத்துறையும் அவர்களை வழிகாட்டக் கூடிய நல்ல தலை மையும் இருக்க வேண்டும் என உணர்ந்தோம். முப்படைகளையும் வழிநடத்துவதற்குரிய பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த கட்ட மாக முப்படைகளையும் விரிவாக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பதவிக்கு வந்த பின்னர் மூன்றரை வருடங்களாக நடைபெற்ற போர்க் காலப் பகுதியில் 5 ஆயிரம் இளைஞர்கள் கிராமங்களில் இருந்து வந்து படைத்துறையில் இணைந்து கொண்டார்கள்.

அவர்கள் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுப் படைத்துறையில் இணைக்கப்பட் டார்கள். அடுத்ததாக, படைத்துறையில் ஆயுத தளபாடங்களுக்கும் மற்றும் உபகரணங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு இருந்தது. இதனை உணர்ந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்்ச அவற்றை நிவர்த்தி செய்வதற்காக வரவு-செலவுத் திட்டத்தில் பெருந்தொகை நிதியைப் படைத்துறைக்கு ஒதுக்கினார்.

இந் நிதியைக் கொண்டு பெருந்தொகை ஆயுத தளபாடங்கள் சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற எமது நட்பு நாடுகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டன. விடுதலைப்புலிகள் மீதான வலிந்த தாக் குதலை ஆரம்பித்து பெரும் எடுப்பில் போரை முன்னெடுத்துச் செல்லும் போது சர்வ தேச நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புக்களிடம&#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக