செவ்வாய், 4 மே, 2010

பகிடிவதைச் சம்பவங்களில் இலங்கை முதலாம் நிலை

பகிடி வதைச் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை முதலாம் நிலை வகிப்பதாக பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தெரிவித்தள்ளார். பகிடி வதைச் சம்பவங்கள் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்போது இலங்கையில் மிகவும் மோசமான நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் மட்டுமன்றி ஏனைய கல்வி நிறுவனங்களிலும் பகிடி வதை வியாபித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர் அமைப்புக்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையினால் ஒழுக்கத்தை பேணிப் பாதுகாப்பதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளதென தெரிவித்துள்ளார்.

பகிடி வதையை தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பகிடி வதைச் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். கடுமையான முறையில் பகிடி வதையில் ஈடுபடுவோருக்கு எதிராக 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக