ஞாயிறு, 4 ஏப்ரல், 2010
நான் தமிழில் உரையாற்றுவதை நிறுத்தப் போவதில்லை . ஜனாதிபதி.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தின் போது பல்வேறு இனக்குழுக்களின் ஒரு பிரிவினர் மீது கோபம் கொண்டு அவர்களை கடுமையாக சாடியதாக தெரிவி;க்கப்படுகிறது. சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தின் போது ஜனாதிபதி தமிழில் உரையாற்றினார் இதன்போது சிங்களவர்கள் கூக்குரலிட்டனர். இதன்போது கோபம் கொண்ட ஜனாதிபதி தானும் ஒரு சிங்களவர் தான் ஆனால் தமிழில் மாத்திரமே உரையாற்றுவேன் அதனை புரிந்துக் கொள்ள முடியாவிட்டால் இங்கிருந்து வெளியே செல்லுங்கள் என சத்தமாக கூறியுள்ளார் எனினும் அப்போதும் கூட்டத்தினர் கூக்குரலிட்டுள்ளனர். நீங்கள் எனக்கு தடங்கலாக செயற்பட்டால் நான் தமிழில் உரையாற்றுவதை நிறுத்தப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி வேட்பாளர் பி.சுமதிபாலவை அழைத்து ஜனாதிபதி எச்சரித்தார். சுமதிபாலவும் ஜனாதிபதி தமிழில் பேசியபோது கூக்குரலிட்டதாக தெரிய வந்தமையை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏற்கனவே கண்டியில் ஜனாதிபதி அமைச்சர் சரத் அமுனுகமவுக்கு ஆதரவாக பேசியபோது மக்கள் கூட்டம் கூக்குரலிட்டது அதேபோல காலியில் தமது நண்பர் சச்சின் வாஸ் குணவர்தனவுக்கு ஆதரவாக பேசிய போதும் கூட்டத்தினர் கூக்குரலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக