வியாழன், 22 ஏப்ரல், 2010

சவூதி அரேபியாவின் ஜேடார் கந்தஹார் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்து இருப்பவர்களிடையே இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர்

சவூதி அரேபியாவின் ஜேடார் கந்தஹார் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்து இருப்பவர்களிடையே இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியப் பிரஜைகளுக்கும் இலங்கையர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி அது கொலையில் முடிந்துள்ளதாக ஜேடார் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இக்கலவரத்தில் இன்னும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் இந்தோனேசியர்கள் என்றும் தெரியவருகின்றது. கலவரத்தில் பலத்த காயமுற்ற இலங்கையர் ஜேடார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வைத்திய சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவர் இன்றும் அடையாளம் காணப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகிறது. கலவரம் பற்றிய முழு விசாரணைகளை சவூதிஅரேபிய பொலீசார் ஆரம்பித்துள்ளனர். விசா கிடைக்காமை, எசமானர்கள் சம்பளம் வழங்காமை, துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் பணியாளர்கள் இந்த பாலத்துக்கடியில் தஞ்சமடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக