ஞாயிறு, 14 மார்ச், 2010

புதிய தலைமைச் செயலகத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்து பேசியதாவது: இவ்வளவு பிரமாண்டமான புதிய சட்டசபை வளாகத்தை உருவாக்கிய முதல்வர் கருணாநிதியை பாராட்டுகிறேன். தமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெரும் தலைவர்கள் உருவாகி நாட்டுக்காக பணியாற்றி உள்ளனர். குறிப்பாக, ராஜகோபாலாச் சாரி, காமராஜர், அண்ணாத் துரை, சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன், எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட தலைவர்களை குறிப்பிடலாம். அவர்கள், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டனர். நாட்டு மக்களை பசியிலிருந்து காக்கும் வகையில், பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் சி.சுப்ரமணியம். வெங்கட்ராமன், தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டவர். எம்.ஜி.ஆர்., மதிய உணவு திட்டத்தை துவக்கினார்.
முதல்வர் கருணாநிதி 11வது முறையாக எம்.எல்.ஏ.,வாகவும், ஐந்தாவது முறையாக முதல்வராகவும் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார். முதல்வர் கருணாநிதியின் அறிவுக்கூர்மை, அரசியல் அனுபவம், தலைமைப் பண்பு ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பல வகையில் உதவியாக இருந்து வருகிறது. நான் பலமுறை அவரது ஆலோசனைகளை பெற்றுள்ளேன். அவரது அனுபவத்தைப் பெற்று ஆட்சியை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நாட்டின் வளர்ச்சிக்கு முன்மாதிரியாக தமிழகம் விளங்கி வருகிறது. கல்வி, ஆட்டோமொபைல், தொழில்துறை, ஜவுளி, சேவைப்பிரிவு உள்ளிட்ட துறைகளில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. கிராமப்புற வளர்ச்சியிலும் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. பல துறைகளில் நாட்டிற்கே தமிழகம் முன்மாதிரியாக இருந்து வருகிறது, என்றார்.

இந்த செய்தி அதிமுகவினருக்கு நிச்சயம் கலக்கத்தை ஏற்படுத்தும்.450 கோடி செலவில் புதிய சட்டசபை வளாகம் தேவையா என்று பெரிய விஞ்ஞானிகள் போல,கெட்ட எண்ணத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு,துக்கம் தாங்கமுடியாமல் வாயிலும்,வயிற்றிலும் அடித்துக்கொண்டு கேள்விகள் கேட்பார்கள். இந்த புதிய சட்டசபை திமுக எம்எல்எகளுக்காக மட்டும் கட்டப்பட்டதல்ல.இது தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவானது. சிலர் பேசுவார்கள்,மாநிலத்தில் மக்களின் ஏழ்மை நிலை இன்னும் முழுமையாக அகற்றபடவில்லையே? ஏன் இந்த வீண் செலவு என்று.நல்ல கேள்விதான்.நாட்டு மக்களுக்காகத்தான் இந்த அரசாங்கம்.மக்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டவேண்டும். ஆனால் அதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு திட்டங்கள் தீட்டுங்கள் என்று சொல்லகூடாது.அவர்கள் நல்லவராக இருந்தாலும் சரி,கெட்டவராக இருந்தாலும் சரி நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் என்பதால் அவர்களுக்கும் சரியான முறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். உண்மையாக சொல்லபோனால் மற்ற கட்சிகளின் ஆட்சியில், மக்களுக்காக செய்யப்பட்ட நன்மைகளோடு ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் செய்யப்பட்ட நன்மைகள் மிக மிக அதிகம்.அதை நன்மைகள் என்று சொல்வதைவிட சாதனைகள் என்றே சொல்ல வேண்டும்.சட்டமன்ற வரலாற்றில் ஐம்பது ஆண்டுகாலமாக தோல்வியையே காணாத மாபெரும் தலைவர்,ஐந்தாவது முறையாக முதல்வராக இருந்துகொண்டு மக்களுக்காகவே உழைக்கும் ஒப்பற்ற தலைவர் டாக்டர்.கலைஞரின் பணிகள் தொடரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
www.dinamalar.com
by அரசு (சென்னை),Eunos,Singapore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக