வெள்ளி, 19 மார்ச், 2010

புலிகளின் அனைத்து அடையாளச் சின்னங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள்

புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்ததும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் தற்போது படையினிரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களினால் இனிமேல் தலைத்தூக்க முடியாது எனவும் அரசாங்கம் பிரசாரம் செய்துவரும் இந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் அனைத்து அடையாளச் சின்னங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடபகுதியில் புலிகள் அமைப்பின் அனைத்து அடையாளச் சின்னங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. புலிகள் அமைப்பின் தலைவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிடுவதற்கு உல்லாசப் பயணிகள் உள்ளிட்ட மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. னவே, இவற்றினை இல்லாதொழித்து குறித்த பகுதிகளில் சுற்றுலாத்தலங்களை நிர்மாணிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக