சாமியார் நித்யானந்தா, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லெனின் தனது புகாரில் தெரிவித்துள்ளதை அடுத்து, கொலை மிரட்டல் வழக்கை மட்டும் தமிழக போலீஸ் விசாரிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சாமியார் நித்யானந்தா மீதான பாலியல், கூட்டுசதி, மோசடி உள்ளிட்ட 5 வழக்குகள் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாமியார் நித்யானந்தா, நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அந்த வீடியோ பதிவுகள் போலீயானது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக, ஆழமாக சொல்ல விரும்புகின்றேன். சட்ட ரீதியாக எந்த தவறையும் நானோ, தியான பீடமோ செய்யவில்லை. நாங்கள் இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகள் சார்ந்த எல்லாவிதமான செய்திகளையும், உண்மைகளையும் திரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

சில நாட்களில் நாங்கள் செய்திகள் அனைத்தையும் சேகரித்தப் பிறகு, எல்லா உண்மைகளையும் உங்கள் முன் திறந்து வைக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக